திருப்பூரில் வாகை சூடிய
`வெற்றி’ அமைப்பு!
மரம் வளர்ப்பு, அணைக்கட்டு சீரமை ப்பு, அரசுப் பள்ளிக்கு கட்டிடம்…
சாதனை முகங்கள் | இந்து தமிழ் திசை 05.01.2019
எல்லோரும் தொழில் செய்யலாம். ஆனால் அந்தத் தொழிலால் ஊருக்கு ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, அதற் கு கைமாறாக நன்மை செய்ய மனதும், சமூகத்தின்மீதான நேசிப்பும் தேவை. ஊர் கூடித் தேர் இழுக்கலாம். ஆனால், யார் முதலில் இழுப்பது? திருப்பூரில் சேவைஎன்னும் தேரை இழுத்துள்ளது `வெற்றி` அமைப்பு. தனி மரம் தோப்பாகாது என்பதை நன்கு உணர்ந்துள்ளார் இந்த அமைப் பின் நிறுவனர் டி.ஆர்.சிவராம். ஏறத்தாழ19 ஆண்டுகளுக்கு முன் அவர து மனதில் விழுந்த விதை விருட்சமாகி, அந்த விருட்சம் விழுதுகளாக கிளை பறப்பி, இன்றைக்கு வெற்றி வாகை சூடியுள்ளது.
தமிழகத்தில், சென்னைக்கு அடுத்த படியாக பல்வேறுமாவட்டங்களைச் சேர்ந்தவ ர்களும் பெரும்பான்மையாக வாழும் ஊர் திருப்பூர். பின்னலாடை த் தொழில் மெல்லமெல்ல வளர, தமிழகத்தின் பல்வேறு குக்கிராமங்களில் இருந்தும் இங்கு வந்து குடியேறினர். அவர்கள்தான் இன்றைக்கு நகரின் பெரும்பான்மை வாசிகள். அதுமட்டுமா, நாட்டின் பல்வேறு மாநிலங்களச் சேர்ந்தவர்களும் கடந்த 15 ஆண்டுகளுக்குள் பிழைப்புத் தேடி அதிக அளவில் திருப்பூருக்கு வந்து குடியேறியுள்ளனர்.
தொழில் நகரங்களில் சுற்றுச்சுழல் பாதிப்பு கடுமையாக இருக்கும். இதற்கு திருப்பூர் மட்டும் விதிவிலக்கா என்ன? திருப்பூர் பின்னலாடை த் தொழில் வளர்ச்சியை நோக்கிப் பயணித்தபோ து, காற்று மாசு, நிலத்தடி நீர்பாதிப்பு, சாய, சலவை ப் பட்டறை களால் மண் பாதிப்பு என மோசமான நிலைக்குச் சென்றது திருப்பூர் நகரம். ஊரின் சுற்றுச்சூழல் முற்றிலும் மாறியது. “தொழில் செய்கிறோ ம். பணம் ஈட்டுகிறோ ம். ஆனால், தொழில் வளர்ச்சிக்கு நாம் கொடுத்தவிலை சற்றே அதிகம்” என்பதை பலரும் உணர்ந்தனர் . “அடுத்த தலை முறையின் பாதுகாப்புக்கு என்ன செய்யப் போகிறோம்?” என்ற கேள்வியும் பலரது மனதில் எழுந்தது. இதற்கு பதில் அளித்துள்ளது திருப்பூர் வெற்றி அமைப்பு.
விதை விழுந்த கதை:
“19 ஆண்டுகளுக்கு முன், 2000-ம் ஆண்டில்’ஆண்டிபாளையம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பாக’த்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். தொழில் வளர்ச்சியால் திருப்பூர் மாசடைந் துள்ளது குறித்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, மரக் கன்றுகளை நட்டு, பாதிப்பைக் குறைக்கலாமே என்ற எண்ணம் எழுந்தது. பெரிய கனவுகள் எதுவுமின்றி, மிகச் சிறிய அளவில் மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங் கினோம். 2000-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகளைநட்டு, பராமரிக்க த் தொடங்கினோம். 2004-ல்தான் ஊரின் எல்லையைக் கருத்தில் கொண்டு, சேவையை விரிவுபடுத்தும்வகையில் ஆண்டிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை `வெற்றி` அமைப்பா க மாற்றினோம். அடுத்த 8 ஆண்டுகளில், அதாவது 2008-ல் திருப்பூர்-மங்கலம் பாதையில், சாலையோரங்களில் தொடர்ச்சியாக மரக்கன்றுகளை நட்டுவைத்தோம்” எனத் தொடங்கினார் அமைப்பின் நிறுவனர் டி.ஆர்.சிவராம்.
சவாலே சமாளி!
“வழக்க மாக மரக்கன் றுகள் நடும் பணியில் ஈடுபடுவோர், அவற்றை நட்டுவை த்துவிட்டு, அதன் பிறகு மீண்டும் அடுத்த ஆண்டுதான் அங்கு சென்று, நட்டுவைத்த மரக்கன்று என்னவாயிற்று என்று பார்ப்பார்கள். ஆனால், நாங்கள் நட்டுவைத்த மரக்கன்றுகளை, பிறந்த குழந்தையைப் பேணிக்காப்பதுபோல, தினமும் சென்று பார்த்து, பராமரித்தோம். சீரான இடைவெளியில் மரக்கன்றுகளுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் ஊற்றுவது, அதற்கு இரும்பால் வேலி அமைப்பது எனபல்வேறு பணிகளை மேற்கொண்டோம்.
சாலையோரம் மரக்கன்றுகளை நட்டதால், அங்கு கடை நடத்த வந்தவர்கள், தங்கள் வியாபாரத்துக்கு மரம் இடையூறாக இருக்கும் எனக் கருதினர். சிலர், மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்தனர். இன்னும் சிலரோ, மரக்கன்றுகள் மீது ஆசிட் ஊற்றி, அதை கருகச் செய்தனர். இதனால், சாலையோரம் மரக்கன்றுகளை வளர்ப்பது, பெரும் சவாலாக மாறியது. அதுமட்டுமல்ல, இரவு நேரங்களில் ’குடி’மகன்கள் சிலர், மரக்கன்றுகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கூண்டுகளைத் திருடி, விற்கத் தொடங்கினர். மனிதர்கள் மட்டுமல்ல , சாலையோரம் திரியும் ஆடு, மாடுகளும் இடையூறு விளைவித்தன. மரக்கன்றுகளை சாப்பிட்டு அவை பசியைத் தீர்த்துக் கொண்டன. ஆனால், இதுபோன்ற தொடர் இடையூறுகளால் நாங்கள் துவண்டுவிடவில்லை.
மொத்தம் 8 ஆண்டுகளில் மங்கலம் பாதையில் 25,000 மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். அவை தற்போதுநன்கு வளர்ந்து, நிழல் தரும் குடையாய் மாறியுள்ளன. கருவம்பாளையம், பாரப்பாளையம் பகுதிகளில் ஓங்கி வளர்ந் திருக்கும் மரங்கள், எங்கள் பணியை மெச்சுகின்றன”
என்றார் பெருமிதத்துடன். உண்மைதான், மங்கலம் சாலையில் பயணிக்கும் போது, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது `வெற்றி` அமைப்பு நட்ட மரங்கள்.
சீரமைக்கப்பட்டது சோழர்கால அணைக்கட்டு:
எந்த வேலை செய்தாலும், சிறப்பாக செய்தால் அதற்கான அங்கீகாரம் நிச்சயம் கிடை க்கும். மரக்கன் றுகளை வளர்த்த வெற்றி அமைபை அணுகிய அப்ப குதி விவசாயிகள், நொய்யல் வழித்தடத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த மங்கலம் அணைக்க ட்டை சுட்டிக் காட்டினர். `வெற்றி` அமைப்புக்கு அடுத்த பணி தொடங்கியது.
நிறைந்த குளமும் மக்கள் கொண்டாட்டமும்:
ஆண்டிப்பாளையம் பகுதியில் உள்ள மங்கலம் அணைக்கட்டை சீரமைத்தால், அதன் வழியாக இரண்டரை கிலோமீட்டர் நீளத்துக்கு, நொய்யல் வழித் தடத்தில் தண்ணீர் பாய்ந்து வந்து, ஆண்டிபாளையம் குளத்தை நிரப்பும். கொங்கு மண்ணை சோழர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட
மங்கலம் அணைக்கட்டு கடுமை யாக சிதிலமடைந் திருந்தது. விவசயிகளின் நலன் கருதி, 2005-ல் இந்த அணைக்கட்டை சீரமைக்க த் தொடங்கினர் வெற்றி அமைப்பினர். கோவை மாவட்டம் பேரூரில் உள்ள கல்வெட்டில் `முட்டம் தொடங்கி 32 அணைக்கட்டு’ என்ற கல்வெட்டு உள்ளது. அதாவது, முட்டம் கிராமத்திலிருந்து கரூர் மாவட்டம் நொய்யல் கிராமம் வரை 32 அணைக்கட்டுகள் இருந்ததாக இது குறிப்பிடுகிறது. நொய்யல் நீர்வழிப் பாதையில் உள்ள மங்கலம் தடுப்பணையும் இதில் ஒன்று. வரலாற்றுப் பெருமையைத் தாங்கிநிற்கும் இந்த அணைக்கட்டு, அப்போதைய நீர் மேலாண்மைக்கு பெரிய உதாரணம். 2005 ஆகஸ்ட் 15-ம் தேதி சீரமைப்புப் பணி தொடங்கியது.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையின் நுட்பத்தைக் கண்டறிந்த பொறியியல் வல்லுநர்கள் குழு, கட்டமைப்பு தொழில் நுட்பத்தைக் கண்டு வியந்தது. பொதுப்பணித் துறை ஒத்துழைப்புடன் சீரமைப்புப் பணி செம்மையாக முடிந்தது. ஏறத்தாழ இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சீரமைப்புப் பணி, அதே ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. அடுத்த சில மாதங்களில் மழை கொட்டியதால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாய்க்கால் வழியாக புது வெள்ளம் பாய்ந்து, 60 ஏக்கர் பரப்பு கொண்ட ஆண்டிபாளையம் குளத்தை நிறைத்தது.
குளம் நிறைந்து, கடல்போல காட்சியளித்த தால் மனம் மகிழ்ந்த மக்கள் , இதை விழாவாகக் கொண்டாடினர். பல ஆண்டுகளாக தடுப்பணை சீரமைக்கப்படாமல் இருந்ததால், அப்பகுதியில் நீரின்றி வறட்சி நிலவியது. இதனால், விவசாயத்தை விட்டு வெளியேறிய விவசாயிகள் பலர், பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்கு சென்றனர். இந்த நிலையில், எஞ்சியிருந்த விவசாயிகளை அப்பகுதியில் வேளாண்மையில் தக்கவைத்தது இந்த முயற்சி. இன்றுவரை நம்பிக்கையோடு விதைக்கிறார்கள் விவசாயிகள். தடுப்பணை வழியே பாய்ந்தோ டுகிறது தண்ணீர்.
கழிப்பறைக் கதவும்… புதிய கட்டிடமும்…
மரக்கன்றுகள், அணைக்கட்டைத் தொடர்ந்து வெற்றி அமைப்பின் பார்வை விழுந்த இடம் இடுவம்பாளையம் அரசுப் பள்ளி. 2008-ல் வெற்றி அமைப்பை அணுகிய இடுவம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி நிர்வாகம், பெண் குழந்தைகள் அதிகம் படிப்பதால், கழிவறைக்கு கதவு வசதி செய்துதருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதன் பின்னர் நடந்த செயல்பா டுகள் ஆச்சரியமளிப்பவை. அதை விவரிக்கிறார் டி.ஆர்.சிவராம்.
“மாநகரின் விரிவுபடுத்தப்ப ட்ட பகுதி என்பதால், தொழிலாளர்கள் பலரும் இடுவம்பாளையத்தில் குடியேறினர். அவர்களது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், இடுவம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றனர். ஏராளமான மாணவிகள் பயிலும் பள்ளியில், கழிவறைக்குகதவு வசதி வேண்டுமெனக் கோரி எங்களை நாடினர். வெற்றி அமைப்பின் பொறியியல் குழு அப்பள்ளியைப் பார்வையிட்டது. அப்போது, அங்கு புதிதாக கழிவறை அமைத்தாலும், அவர்களால் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியாது என்பதை எங்கள் குழு அறிந்தது. அதற்குக் காரணம், அங்கு ஆழ்குழாய் வசதி கிடையாது. தண்ணீரின்றி, கழிவறைக்கு கதவு அமைத்தாலும் யாருக்கும் பயன் ஏற்படப்போவ தில்லை. எனவே, தொலை நோக்குத் திட்டமாக பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனக் கருதினோம். மேலும், 1,000-கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தாலும், அந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லை. மரத்தடியில் அமர்ந் தும், ஒரு வகுப்பறையின் வெளியே உள்ள திண்ணையில் அமர்ந்தும் படிக்கும் சூழலை நேரில் பார்த்தோம்.
எனவே, உடனடித் தேவை வகுப்பறை என்பதை உணர்ந்தோம். இதையடுத்து, எங்கள் அமைப்புக்கு தொடர்ந்து உதவி செய்யும் நன்கொடை யாளர்களை அணுகினோம். அவர்களிடம் இந்தப் பள்ளியின் தேவை குறித்து விளக்கியபோது, பலரும் மனமுவந்து ஆளுக்கொரு செலவை ஏற்றனர். `சென்னை சில்க்ஸ்` நிறுவனம்பள்ளியை ஒட்டி 8.50 ஏக்கர் நிலம் வாங்கித்தரவே, அந்த நிலத்தில் பள்ளியை விரிவுபடுத்தியது வெற்றிஅமைப்பு. இதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை அணுகினோம். ஆளுக்கொரு வகுப்பறை என 24 பேர் ஒன்றுகூடி உதவ, புதிய பள்ளிக் கட்டிடம் உருவானது. உதவியை எப்போதும் பணமாகப் பெறுவதில்லை என்பதை வெற்றி அமைப்பு கொள்கையாகவே வைத்திருப்பதால், வகுப்பறைக் கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களைகொடை யாளர்கள் வழங்கினர். தற்போது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளைக் காட்டிலும், இடுவம்பாளையம் அரசுப் பள்ளி கல்வித் தரத்தில் உயர்ந் துள்ளது எங்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் .
தரம் உயர்ந்த அரசுப் பள்ளி:
தற்போது இடுவம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந் துள்ளதுடன், மாணவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு 1,000 பேர் படித்த இப்பள்ளியில், தற்போது 3 ஆயிரம் பேர் பயில்கின்றனர். ஆண்குழந்தைகள், பெண் குழந்தைகளுக்குத் தனித்தனியே கழிப்பறைகள், போதிய தண்ணீர் வசதியுடன் உள்ளது இப்பள்ளி. “கழிப்பறைக்கு கதவு கேட்டு அணுகியவர்களுக்கு, புதிய கட்டிடமே கட்டித் தந்ததை எப்போதும் மறக்க முடியாது. எங்கள் பள்ளியின் சூழல் முற்றிலும் மாறியுள்ளது” என நெகிழ்கின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள் .
“கல்வி போதிப்பதை விட மகத்தான செயல் இந்த உலகில் எதுவுமில்லை. குறிப்பாக, தொழிலாளர்களின்குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு வழங்கியது, காலத்துக்கும் அழியா சொத்தாக இருக்கும்” என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர் . இந்தப் பணிகளை எல்லாம் விஞ்சும் வகையில், வெற்றி அமைப்பு கையில் எடுத்த திட்டங்கள் இரண்டு. முதலாவது, ஆண்டிபாளையம் குளத்தை தூர் வாரியது. இரண்டாவதாக `வனத்துக்குள் திருப்பூர்`. இந்த இரு திட்டங்களும் எப்படி உருவானது? எப்படி பிரம்மாண்டமான வடிவம் பெற்றது.