இயற்கையை பாதுகாக்கும்
‘வனத்துக்குள் திருப்பூர்’

இயற்கையை பாதுகாக்கும்
‘வனத்துக்குள் திருப்பூர்’

6.65 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத் ‘வெற்றி’ அமைப்பு.

சாதனை முகங்கள் | இந்து தமிழ் திசை 06.01.2019

தொழில் நகரமான திருப்பூரை ஒட்டியுள்ள விவசாயப் பகுதி ஆண்டிபாளை யம். குறிப்பாக, பரம்பிக்குளம் ஆழியாறு பாசனமும், நொய்யலின் நீர்வழித்தடமும் உள்ள பகுதி என்பதால், குளத்தை ஆழப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்ட ம் உயரும் எனக் கணித்தனர். நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லா ம் ஆண்டிபாளை யம் குளத்தில் நீர்மட்டம் உயரும். குளத்தை தூர் வாருவது, சிதிலமடைந்த பகுதிகளை செப்பனிடுவது, நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என அடுத்த திட்டத்தைகை யில் எடுத்தது வெற்றி அமைப்பு.

மக்கள் இயக்கம்:

`வெற்றி` அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான குமார் துரைசாமி கூறும் போது, “குளம் சீரமைப்பு பணியை மக்கள் இயக்கமாக மாற்ற முடிவுசெ ய்தோம். `குளத்தை காக்கும் கர சேவை` என்பதை உணர்ந்த பொதுமக்களும், குடும்பம் குடும்பமாக பங்கெடுத்தனர். நான்கே ஞாயிற்றுக்கிழமை களில் மொத்த குளத்தையும் தூர் வாரி முடித்தோம். வாரந்தோறும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி, பின்னலாடை நிறுவனத் தொழிலதிபர்கள், பல்வேறு தொழில் அமைப்பினர், அரசியல் வாதிகள், மத அமைப்புகள் மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், கடை நிலைத் தொழிலாளிகள் என அனைவரும் எவ்வித ஈகோவும் இல்லாமல், ஒரு குடும்பமாக பங்கெடுத்ததுதான் திட்டத் தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

மண்வெட்டி, கடப்பாரை, மண்சட்டி என அவரவர் சக்திக்கு என்ன இயலுமோ, அதைக் கொண்டுவந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்தோம்.

பலமடைந்த குளக்கரை

குளத்தை சீரமைக்கும் பணிகளைப் பிரித்துக் கொண்டு, குழுவாக வேலை செய்தார்கள். இந்த மக்கள் சக்தியைப் பயன்படுத்தி, குளத்தை தூர் வாரியதுடன், ஒன்றரை மீட்டர் ஆழத்துக்கு குளத்தை ஆழப்ப டுத்தின ம். 6 பொக்லைன் இயந்திரங்கள் 30 டிப்பர் லாரிகள் உதவியுடன் மேற் கொண்ட பணியால், நான்கே ஞாயிற்றுக் கிழமைகளில் தூய்மையானது குளம். தூர்வாரிய போது எடுத்த மண்ணைக் கொண்டு இரண்டே முக்கால் கிலோ மீட்டர் நீளம் சுற்றளவு கொண்ட குளத் தின் கரையையும் பலப்படுத்தினோம்” என்றார்.

குளத்தின் நடுவில் இரு தீவுகள்!

மற்றொரு ஒருங்கிணைப்பாள ரான அனிதா சேகர் கூறும் போது “குளத்தை தூர் வாரியது மட்டுமின்றி, பறவை களை ஈர்க்கக்கூடிய வகையில், குளத்தின் நடுவில் இரண்டு தீவுகளை ஏற்படுத்தினோம். அதற்கான மரங்களை, அந்த சிறிய மணல் பரப்பில் நட்டுவைத்தோம். பறவைகள் அதிகம் சாப்பிடும் சர்க்கரைப் பழம், பறவைகள் பாதுகாப்பாக வாழ முள் மூங்கில் ஆகியவற்றை நட்டுவைத்து, பறவைகளைப் பாதுகாத்தோம். குளத்தில் மீன் இனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறு நீர்வாழ் உயிரினங்களும் இருப்பதால், பறவைகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக அரசு, தன் பங்குக்கு ரூ.1.75 கோடி மதிப்பில் குளக்கரையில் அருமையான பூங்காவை ஏற்படுத்தியுள்ளது. இப்போதும் விடுமுறைநாட்களில், குளக்கரை பூங்காவுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுக்கின்றனர் பொதுமக்கள் ” என்றார் .

அப்துல் கலாம் கனவு… அடுத்து, கலாமின் கனவை நனவாக்க உருவானது `வனத்துக்குள் திருப்பூர்`. “2015 ஜுலை 27-ம் தேதி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் மறைவையொட்டி தொழில் துறையினர் இணைந்து, பிரம்மாண்ட அஞ்சலிக் கூட்டத்தை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடத்தினோம். கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டபோது, தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என 7000-ம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட அமைதி ஊர்வலமும் நடத்தப்பட்டது. அப்போது, அமைப்பின் தலைவர் டி.ஆர்.சிவராம் மனதில் தோன்றிய விஷயம்தான் `வனத்துக்குள் திருப்பூர்`. கலாம் எனும் மாமனிதருக்கு உரிய முறையில் அஞ்சலி செலுத்த வேண்டுமெனக் கருதினோம். அவரது கனவுகளில் ஒன்றை நனவாக்கினால், அதுவே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும் என்று கருதினோம்” என்றார் `வெற்றி` அமைப்பு நிர்வாகி ஈரோடு கணேஷ்.

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின்கீழ் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள்.

கனவு நனவானது

“நகரமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவற்றால் 1991-ம் ஆண்டுக்குப் பிறகு நாம் இயற்கையைத் தொடர்ந்து சீரழித்து வருகிறோம். இந்த சீரழிவால் பசுமைப் பரப்பு குறைந்துவிட்டது. நிலத்தில் 34 சதவிகிதம் மரங்கள் இருக்க வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால், தமிழகத்தில் 8 சதவிதம்தான் உள்ளது. நகரப் பகுதியில் ஒரு சதவீதம்கூட இல்லை என்பதுதான் நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில், பொருள் தேடி அலைவதையே குறிக்கோளாகக் கொண்டு, பலரும் நோய்களுக்கு உள்ளாகின்றனர். அதை உணர்ந்தே, ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 10 மரங்களை வளர்க்க வேண்டும் என்ற கனவை விதைத்தார் கலாம். அந்தத் கனவை நனவாக்கவே வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை கையில் எடுத்தது வெற்றி அமைப்பு” என்றார் குமார் துரைசாமி. இரண்டு ஆண்டுகள் பாரமரிப்பு திட்டத்தலைவர் டி.ஆர்.சிவராம், “கலாம் மறைவையொட்டி 2015-ல் `வனத்துக்குள் திருப்பூரை`த் தொடங்கினோம். முதல் 4 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க இலக்கு நிர்ணயித்து களமிறங்கினோம். ஆனால், 100 நாட்களில் 1.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு, அப்படியே விட்டுவிடும் திட்டம் இல்லை இது. எங்கெல்லாம் மரங்களை நடுகிறோமோ, அங்கெல்லாம் இரண்டு ஆண்டுகள் பாரமரிப்பு  உத்தரவாதம்கொடுத்துதான், பணிகளைத் தொடங்கினோம். இது எளிதான பணி இல்லை. இரண்டு ஆண்டு பாரமரிப்புக்கு பெரிய பொருளாதாரத் தேவை ஏற்படும். முதலாம் ஆண்டு மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததைப் பார்த்த தொழிலதிபர்கள், இயற்கை தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பலரும், மீண்டும் அடுத்த ஆண்டும் இந்த திட்டம் தொடர வேண்டுமென எதிர்பார்த்தனர். இரண்டாம் ஆண்டில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயித்தோம். ஆனால் 2.25 லட்சம் மரக்கன்றுகளை நட்டோம். `மரம் உங்களுக்கு, காற்றும், மழையும் மக்களுக்கு` என்ற முழக்கத்துடன், தனியார் நிலங்களில் மரக்கன்றுகளை நடத் தொடங்கினோம். மேலும், 20, 25 ஆண்டுகளுக்கு இந்த நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்த தனியாரின் நிலங்களில் மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். நிலங்களை தரிசாக வைத்திருந்த விவசாயிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்தது. எங்கள் திட்டத்தின்கீழ், நீண்டகாலம் பயன் அளிக்கக்கூடிய வேம்பு, நாவல், தேக்கு, மலைவேம்பு, இலுப்பை மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். `காயா` எனப் படும் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த தேக்கு வகையை யும் நட்டோம். வறட்சியை தாக்குப் பிடித்து வளர்ந்து பலன் அளிக்கும் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்தோம். தனியார் நிலத்தில் மரங்களை நடுவது தொடர்பாகவும், `20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மரங்களை உரிமையாளர்கள் வெட்டினால் என்ன செய்வது?` என்பது போன்ற கேள்விகளையும் எதிர்கொண்டோம். ஆனால், பசுமைப் பரப்பை அதிகரிக்கும் எங்கள் நோக்கிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை. அடுத்தடுத்த மரக்கன்றுகள் நடும் திட்டத்தைசெயல்படுத்தி, தற்போது `வனத்துக்குள் திருப்பூர்- 4`ம் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை 6.65 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இதில் 93 சதவீத மரக்கன்றுகள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் `ஜியோ டாகிங்` மூலம் கண்காணிக் கிறோம். இதன் மூலம் எங்கெங்கெல்லாம் `வனத்துக்குள் திருப்பூர்’ திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு, வளர்க்கப்படுகிறது என்பதையும் கண்காணிக்கிறோம். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம். பல பின்னலாடை நிறுவனங்களும், திருப்பூர் தொழிலதிபர்களும் எங்களுக்கு பக்கபலமாக, தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். தற்போது 30 லாரிகளில் தொடர்ச்சியாக மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, சுழற்சி அடிப்படையில் பராமரிக்கிறோம்” என்றார்.

துணைபுரியும் அமைப்புகள்

அனிதா சேகர் கூறும்போது “பிறந்து வளர்ந்த கிராமம் வறட்சிக்கு உள்ளானதால், சொந்த கிராமத்துக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று கருதினோம். அப்படித்தான் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் என்னை ஈர்த்தது. ரூ.1 கோடி செலவில் இதுவரை லட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுவைத்து, நல்லதங்காள் ஓடை அணைப் பகுதியையொட்டி நீர்ப்பிடிப்புப் பகுதிகளை வனம்போல உருவாக்கியுள்ளோம். வெள்ளகோவில் `நிழல்கள்`, காங்கயம் `துளிகள்`, ஊத்துக்குளி `வேர்கள்`, திருப்பூர் `ட்ரீம் 20` ஆகியவை வனத்துக்குள் திருப்பூர் திட்டத்துக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன” என்றார். வனத்துக்குள் திருப்பூர் திட்டத்துக்கு நிதியுதவி மட்டுமின்றி, மனரீதியிலான உற்சாகத்தையும் தரும் கொடையாளர்களில் முதன்மையானவர் ஈஸ்ட்மென் சந்திரன் ஆவர். “ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த சமூகத்துக்கு ஏதாவது ஒருவகையில் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். பின்னலாடைத் தொழிலை இவ்வளவு பெரிதாக வளர்த்த இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடனாகவே வெற்றி அமைப்பின் அனைத்து திட்டங்களிலும் பங்கெடுத்து, அவர்களுடன் பயணிக்கிறேன். இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

 நஞ்சு இல்லா விவசாயம்

அடுத்தகட்டமாக, திருப்பூர் மாவட்டத்தை, நஞ்சில்லா விவசாயம் கொண்டதாக மாற்றும் `ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங்` திட்டத்தைமேற்கொள்ள முடிவு செய்து, அதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நடத்தி, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகள், விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உண்டான வசதிகளை ஏற்படுத்த உள்ளனர்

இணைந்த கைகள்

“திருப்பூர் என்றாலே பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்ற சாதனை ஒருபுறம் இருந்தாலும், தொழில் வளர்ச்சி என்ற பெயரில் மண்ணை மாசுபடுத்தியவர்கள் என்ற அவப்பெயர், தொழில்முனைவோரை சங்கடத்துக்கு உள்ளாக்கியது உண்மையே. உண்மை என்னவென்றால், இங்குள்ள தொழில்முனைவோர் அனைவருமே விவசாயப் பின்னணியை கொண்டவர்கள்தான். விவசாயத் தொழிலாளியாகவோ அல்லது விவசாயியாகவோ இருந்துவிட்டு, பின்னர் பின்னலாடைத் தொழிலாளியாக மாறி, தொழில்முனைவோராக உருவெடுத்துள்ளனர். எனவேதான், வெற்றி அமைப்பின் திட்டங்களுக்குத் தோள்கொடுக்கிறோம். இயற்கையைக் காக்க வேண்டும் என்ற ஒற்றைப் புள்ளியில், நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்துதான் இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்றனர். இதுவரை பல கோடிகள் செலவழிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு பைசாவும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை நன்கொடையாளர்களுக்கு ஏற்பட்டிருப்பதால்தான், தொடர்ந்து திட்டத்தை கொண்டுசெல்ல முடிகிறது. அதேபோல, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக வனத் துறையும் எங்கள் திட்டத்துக்கு பக்கபலமாக உள்ளன” என்கின்றனர் வெற்றி அமைப்பினர்.

Subscribe Newsletter

Subscribe to our newsletter and get the latest updates