கோடரியை தூர எறி ! மரம் காக்கும் புது கொள்கை தரி !

கோடரியை தூர எறி ! மரம் காக்கும் புது கொள்கை தரி !

Dinamalar 11 July 2021

‘’மண்ணுக்கும் மரம் தான் உரம் !

மழைக்கும் மரம் தான் வரம் !!

மனிதா …

கோடரியை தூர எறி !

மரம் காக்கும்….

 புது கொள்கை தரி !!’’

கருணாகரனின்  கவிதை,  மரங்களின் சிறப்பை நன்றாக உணர்த்துகிறது. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை இரண்டற கலத்திருக்கும் பல விஷயங்களில் மரத்துக்கு மகத்தான முக்கியத்துவம் உண்டு. மரங்களின் கொடையால் கிடைக்கும் பிராண வாயு தான் மனிதர்களை வாழ வைக்கிறது. ஆனால் நன்றி கிஞ்சித்தும் இன்றி, மரம்களை வெட்டி விழுதுபவர்களை பாரத்தால் நெஞ்சம் பதறத்தான் செய்கிறது. நன்றாக வளர்த்த பசுமை பரப்பும் மரத்தை வெட்டுவது கூட ஒரு விதத்தில் கொலை  தான். வீட்டுக்குள் இலை, தழை குப்பை விழுகிறது, கட்டடத்தை சேதமாக்குகிறத, வீட்டின்  மூகப்பை மறைக்கிறது என ஆயிரத்தெட்டு சாக்குபோக்கு  சொல்லி மரங்களை வேட்டி தள்ளுகின்றனர்.

ஒரு மரக்கன்றை நட்டு தண்ணீர் ஊற்றி  பராமரிப்பவருக்கு மரங்களில் அருமை  தெரியும். அதிலும் ஒரு மரம் நன்றாக வளர்வதற்கே  பல ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் ஒரு வினாடியில் அதன் ஆயுளை முடிப்பது எவ்விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.

சமீப காலமாக திருப்பூரில் பசுமையை காதலிப்பவர்கள்  கண்ணில் தென்படுகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டு மெனில் வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலம் வெற்றி அமைப்பினர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் 10.5லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். ஏறத்தாழ 70சதவீதம்  அளவுக்கு மரக்கன்றுகள் விருட்சமாகி வானை  நோக்கி கம்பிரமாக எழுத்துள்ளன.

வெற்றி அமைப்பு மட்டுமல்ல… வேர்கள், விழுதுகள், மரங்களும் மனிதர்களும், பசுமை என மாவட்டத்தின் பல பகுதிகள் இளைவஞர்கள்  பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தி, மரக்கன்று நட்டு பராமரித்து வருவது சற்றே ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

அதேசமயம், திருப்பூர் ஊரடங்கு சமயத்தில் கூட 20க்கும் மேற்பட்ட வளர்ந்து மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்ள்ளது என்பது வேதனையிலும் வேதனை.

வளர்ச்சிப்பணிகள் கூடாது என்பதில்லை. வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக, பல மடங்கு மரங்கள் வளர்க்க வேண்டுமென, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் கூட, அது இன்னும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது .   

சருகுகள் கூட உரமாகின்றன

  • மலர்கள், காய், கனிகள், நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது.
  • கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
  • மண் அரிப்பு, நிலச்சரிவுகளை தடுக்கிறது.
  • நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
  • காய்ந்த சருகு  இலைகள்  மண்ணுக்கு உரமாகின்றன.

மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வேத வாக்கிற்கு இணங்கவும், அவரின் நினைவு நாளில் ‘வனத்துக்குள் திருப்பூர்’ துவக்கப்பட்டது. இதோ, ஆறு ஆண்டுகள் கடந்து இப்போது ஏழாவது ஆண்டில் அடியடுத்து வைத்துள்ளோம்.

மாபெரும் மக்கள் இயக்கமாக மாற முக்கிய காரணமே, ‘தினமலர்’ தான். மரம் வளர்க்க வேண்டுமென்ற லட்சியத்தை, குக்கிராமங்கள் வரை கொண்டு சென்று சேர்த்த பெருமை, “தினமலர்’ நாளிதழுக்கு மட்டுமே உரித்தானது.

இதுவரை 70 வகைகளில்  10.5 லட்சம் மரக்கன்று நட்டுள்ளோம். ஏறத்தாழ 70 சதவீதம் ஒன்றுகள் இன்று மரமாகி, மழை பொழிய காரணமாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியே.

எவ்வளவு தான், நாங்கள் மரங்கள் வளர்த்தாலும், அற்ப காரணங்களுக்காக மரங்களை வெட்டுவது நடந்து கொண்டு தான் உள்ளது. மரங்களும் ஒரு விதத்தில் நமது குழந்தைகளே. நன்றாக வளர்ந்து, பச்சைப்பசேல் என உள்ள மரத்தையும் ஈவு இரக்கமின்றிவெட்டி சாய்க்கின்றனர்.

ஆக்சிஜன் எவ்வளவு மூக்கியமானது என்பதை, இரண்டு ஆண்டுகளாக கொரோனா நமக்கு பாடம் கற்பித்து கொடுத்துள்ளது என்பதை உணர்ந்தாவது மரங்களை வெட்டும் போக்கு குயைற வேண்டும் குறைந்த பட்சம்மரங்களை வெட்டாமல் இருப் பதே, அவற்றை வளர்ப்பதற்கு சமம்.

இயற்கையை பகைத்தால் என்னவாகும் என்பதை உலகமே உணர்த்து  கொண்டுள்ளது மரங்களை,  மறக்காமல் வளர்க்க அனைவரும் முன்வர வேண்டும்.

Subscribe Newsletter

Subscribe to our newsletter and get the latest updates